உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / படையாச்சி மாரியம்மன் கோவிலில் தீர்த்தக்குடம் ஊர்வலம் கோலாகலம்

படையாச்சி மாரியம்மன் கோவிலில் தீர்த்தக்குடம் ஊர்வலம் கோலாகலம்

கோபி : கோபி, படையாச்சி மாரியம்மன் கோவிலில், தீர்த்தக்குடம் ஊர்வலம் கோலாகலமாக நேற்று நடந்தது.கோபி, புதுப்பாளையம், படையாச்சி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 18ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 19ல், பொட்டுச்சாமி பொங்கல், 20ல் கம்பம் நடுதல், 26ல், சந்தனக்காப்பு அலங்காரம் என நடந்தது. நேற்று காலை பவானி ஆற்றில் இருந்து, வாய்க்கால் ரோடு வழியாக, மேள தாளம் முழங்க தீர்த்தக்குடங்களை ஊர்வலமாக பக்தர்கள் எடுத்து வந்தனர். அப்போது அருள் வந்த பக்தர்கள், தீர்த்தக்குடத்துடன் கோவிலை வலம் வந்தனர். 28ல் மாவிளக்கு பூஜை, பால்குடம் மற்றும் அலகு குத்தி வருதல், அக்னி கும்பம் எடுத்தல், கம்பம் பிடுங்குதல் நடக்கிறது. 29ல் மஞ்சள் நீர் உற்சவம், ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. ஏப்.,1ல் மறுபூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை