உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஓடும் வாகனத்தில் வியாபாரி மரணம்

ஓடும் வாகனத்தில் வியாபாரி மரணம்

ஈரோடு:திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் சமுத்திரம், 50; சித்தோட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மூக்கு பொடியை டப்பாவில் அடைத்து சரக்கு வேனில் சென்று கடைகளுக்கு விற்பனை செய்வார். நேற்று விற்பனை முடிந்து, ஈரோடு ப.செ.பார்க் அருகே திருமகன் ஈவெரா சாலையில் வேனை ஓட்டிக்கொண்டு சென்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் நின்ற இரு சக்கர வாகனம் மீது மோதி நின்றது. அக்கம்பக்கத்தினர் வேனை திறந்து பார்த்தபோது, சமுத்திரம் மயங்கி கிடந்தார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. ஈரோடு டவுன் போலீசார் விசாரணையில், மாரடைப்பால் அவர் இறந்தது தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ