உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கஞ்சா கடத்திய இருவர் கைது

கஞ்சா கடத்திய இருவர் கைது

சென்னிமலை:சென்னிமலை முத்தையன் கோவில் அருகே, சென்னிமலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் அத்தாணியை சேர்ந்த ஆனந்த், 26, வந்தார். அவரிடம், 100 கிராம் கஞ்சா இருந்தது. விசாரித்ததில் சென்னிமலை பார்க் ரோட்டில் வசிக்கும், ஈரோடு கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத்திடம், 41, வாங்கி விற்பனை செய்வதாக தெரிவித்தார்.இதை தொடர்ந்து போலீசார், மாருதி ஆல்டோ காரில் கஞ்சா கடத்தி வந்த ஹரிபிரசாத்தை மடக்கிப் பிடித்தனர். அவரிடம், 1.200 கிலோ கஞ்சா இருந்தது. காருடன் கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி