உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / யோகா பயிற்சியாளர் தேர்வு:விண்ணப்பிக்க அழைப்பு

யோகா பயிற்சியாளர் தேர்வு:விண்ணப்பிக்க அழைப்பு

ஈரோடு;ஈரோடு மாவட்டத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம், யோகா வகுப்புகளை நடத்த பயிற்சியாளர் தேர்வு செய்யப்படவுள்ளனர். யோகா வகுப்புக்கான மாத கட்டணம், 300 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழத்தால் வழங்கப்பட்ட யோகா, இயற்கை அறிவியல் இளங்கலை பட்டம் அல்லது யோகா, இயற்கை அறிவியல் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிக்க வேண்டும். தகுதி வாய்ந்த பயிற்சியாளர் முழு விபரத்தை, அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் வரும், 21ம் தேதி மாலை, 4:00 மணிக்குள், ஈரோடு வ.உ.சி., பூங்காவில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்துக்கு வரவேண்டும். விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை, 74017-03490 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை