உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வாணாபுரத்தில் வரும் 11ம் தேதி மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

வாணாபுரத்தில் வரும் 11ம் தேதி மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

கள்ளக்குறிச்சி : வாணாபுரம் கிராம ஊராட்சி சேவை மைய கட்டடத்தில் 11ம் தேதி மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்திய மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினால், நகர்ப்புறம் மற்றும் பேரூராட்சி பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்பெற்றனர். இதையடுத்து, இத்திட்டம் ஊரக பகுதிக்கு விரிவாக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரத்தில் உள்ள கிராம ஊராட்சி சேவை மைய கட்டடத்தில் வரும் 11ம் தேதி மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற உள்ளது.முகாமில், ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட அரியலுார், ஏந்தல், பெரியபகண்டை, வாணாபுரம், யால், அவிரியூர், பொற்பாலம்பட்டு, அத்தியூர் மற்றும் பாக்கம் ஆகிய கிராம ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்