உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பி.டி.ஓ., அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

பி.டி.ஓ., அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

தியாகதுருகம் : தியாகதுருகம் பி.டி.ஓ., அலுவலகத்தில் கலெக்டர் பிரசாந்த் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஒன்றியத்தில் உள்ள 40 ஊராட்சிகளிலும் 36 ஆயிரத்து 760 பேர் பதிவு செய்துள்ளனர். ஆனால் 16 ஆயிரத்து 511 பேர் மட்டுமே வேலை செய்கின்றனர். இதில் 50 சதவீதம் பேர் பணிக்கு வருவதில்லை. தற்போதுள்ள நிலையிலிருந்து கூடுதலாக இத்திட்டத்தில் பதிவு செய்தவர்கள் பணி மேற்கொள்ள கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார்.அதைத்தொடர்ந்து ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கம்ப்யூட்டர் பதிவுகளை ஆய்வு செய்தார். பி.டி.ஓ.,கள் துரைமுருகன், ஜெகநாதன், துணை பி.டி.ஓ.,க்கள் தயாபரன், முத்தமிழ் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை