உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கல்வராயன்மலையில் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் சாராய ஊறல் அழிப்பு

கள்ளக்குறிச்சி, : கல்வராயன்மலை பகுதியில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சாராய ஊறல் அழிக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கபிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் கல்வராயன்மலை பகுதியில் சோதனை மேற் கொண்டனர். அப்போது, கொடமாத்தி வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். தொடர்ந்து, 12 பேரல்களில் இருந்த 2,400 லிட்டர் சாராய ஊறலை சம்பவ இடத்திலே கொட்டி அழித்தனர்.அதேபோல், இன்னாடு வனசரகர் சந்தோஷ்குமார் தலைமையிலான வனத்துறை அலுவலர்கள் மேற்கொண்ட சோதனையில், மணியார்ப்பாளையம் அருவங்காடு பகுதியில் பேரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,600 லிட்டர் சாராய ஊறலை கொட்டி அழித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ