உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வடிகால் வசதியின்றி மழைநீர் தேக்கம் அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்

வடிகால் வசதியின்றி மழைநீர் தேக்கம் அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்

மூங்கில்துறைப்பட்டு, : மூங்கில்துறைப்பட்டு அருகே தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மூங்கில்துறைப்பட்டு அடுத்த உலகலாப்பாடி காலனி பகுதிக்கு செல்லும் வழியில் மழைநீர் வடிகால் வசதியின்றி குளம் போல் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் கொசுத் தொல்லை அதிகரித்து டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது.இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனை கண்டித்து நேற்று அப்பகுதி மக்கள் தேங்கிய மழைநீரில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஊராட்சி தலைவர் பிலோமினா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மணிகண்டன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ