உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / உளுந்துார்பேட்டை பகுதியில் சாலை பணி: கலெக்டர் ஆய்வு

உளுந்துார்பேட்டை பகுதியில் சாலை பணி: கலெக்டர் ஆய்வு

உளுந்துார்பேட்டை உளுந்துார்பேட்டை பகுதியில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.உளுந்துார்பேட்டை அரசு மாணவியர் விடுதியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் மளிகை பொருட்கள் இருப்பு நிலை மற்றும் விடுதி பராமரிப்பு குறித்து கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார். அப்போது மாணவிகளிடம் அடிப்படை தேவைகள் குறித்தும் எதிர்கால கனவுகள் குறித்தும் கேட்டறிந்து கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து உளுந்துார்பேட்டை அடுத்த பில்லுார் பகுதியில் தோட்டக்கலைத் துறை சார்பில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் நிலப் போர்வை அமைத்து தர்பூசணி சாகுபடி செய்யப்படுவதையும், தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் 2.50 ஏக்கர் பரப்பளவில் சொட்டுநீர் பாசன முறையில் பயிரிடப்பட்டுள்ள கத்திரி, வெங்காயம் பயிர்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின், நெடுஞ்சாலைத் துறை சார்பில் உளுந்துார்பேட்டையில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் சிப்காட் தொழிற்சாலைக்கு 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மங்கலம்பேட்டை முதல் எலவனாசூர்கோட்டை வரையிலான நான்கு வழிச்சாலை மற்றும் சிறு பாலங்கள் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது, திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., கண்ணன், மேலாளர் பியர்லின், வேளாண் துணை இயக்குனர் பெரியசாமி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் சசிகலா, உதவி இயக்குனர்கள் முரளி, முருகன் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை