உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பூட்டை உடைத்து திருட முயன்ற 3 பேர் கைது

பூட்டை உடைத்து திருட முயன்ற 3 பேர் கைது

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.மூங்கில்துறைப்பட்டு அடுத்த சவேரியார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அமல்ராஜ், 35; இவர் பகண்டை கூட் ரோட்டில் நகை அடகு கடை வைத்துள்ளார். கடந்த மாதம் 15ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றவர், மீண்டும் 19ம் தேதி வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன. ஆனால், பொருட்கள் ஏதும் திருடு போகவில்லை.அமல்ராஜ் கொடுத்த புகாரின் பேரில், வடப்பொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து, அமல்ராஜ் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற திருவண்ணாமலை ராம்ஜி நகர் வாசுதேவன், 28; குபேந்திரன், 33; சுரேந்திரன், 20; ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை