| ADDED : பிப் 02, 2024 04:01 AM
தியாகதுருகம்: தியாகதுருகம் அடுத்த பீளமேடு ஊராட்சி, மேட்டுக்குப்பம் அரசு துவக்கப்பள்ளியில் 32.80 லட்சம் ரூபாய் மதிப்பில் 2 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.ஒன்றிய துணைச் சேர்மன் நெடுஞ்செழியன், பி.டி.ஓ., க்கள் துரைமுருகன், செந்தில் முருகன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, நகர செயலாளர் மலையரசன், லட்சுமி கல்லுாரி தாளாளர் மணிவண்ணன் முன்னிலை வகித்தனர். ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் புதிய வகுப்பறை கட்டடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.வட்டார கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன், தலைமை ஆசிரியர் ஊராட்சி தலைவர் முத்துலட்சுமி ஆனந்தராஜ், நெடுஞ்செழியன், கோவிந்தராஜ், முருகன், பாலு உட்பட பலர் பங்கேற்றனர்.