உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தற்காலிக டிரைவர்கள் ஓட்டிய பஸ் ஒன்றோடொன்று உரசி சேதம்

தற்காலிக டிரைவர்கள் ஓட்டிய பஸ் ஒன்றோடொன்று உரசி சேதம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் அருகே தற்காலிக டிரைவர்கள் ஓட்டிச் சென்ற இரு பஸ்கள் ஒன்றொடொன்று உரசியது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையொட்டி தற்காலிக ஊழியர்களை நியமனம் செய்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் நேற்று முன்தினம் அரசு பணிமனையில் நுழைவு வாயிலிருந்து பஸ்சை வெளியே எடுத்து செல்ல தற்காலிக பஸ் டிரைவர் ஒருவர் மிகவும் சிரமப்பட்டார். இதனையடுத்து தொ.மு.ச., டிரைவர் பஸ்சை வெளியே எடுத்து அனுப்பி வைத்தார்.இதேபோல் கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் நேற்று காலை 11.40 மணியளவில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது, பஸ் நிலையம் அருகே தற்காலிக டிரைவர்கள் ஓட்டி சென்ற இரு அரசு பஸ்கள் ஒன்றோடோன்று உரசி சிக்கியது. இதனையடுத்து சிரமங்களுக்கு இடையே இரு பஸ்களும் அங்கிருந்து மீண்டும் புறப்பட்டு சென்றது. இதில் பஸ்கள் சேதமடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை