உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  எஸ்.வி.பாளையம் பள்ளியில் சி.இ.ஓ., திடீர் ஆய்வு

 எஸ்.வி.பாளையம் பள்ளியில் சி.இ.ஓ., திடீர் ஆய்வு

சங்கராபுரம்: எஸ்.வி.பாளையம் பள்ளியில் சி.இ.ஓ., கார்த்திகா ஆய்வு செய்தார். சங்கராபுரம் அடுத்த எஸ்.வி.பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சி.இ.ஓ., கார்த்திகா ஆய்வு செய்தார். இதில், பள்ளி துாய்மை, மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நிலைப்பாடு, மாணவர்களின் வருகை பதிவேடு குறித்து ஆய்வு மேற்கொண்டார். கடந்தாண்டு அரசு பொது தேர்வில் 10, 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி அறிக்கை குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். இவ்வாண்டு 100 சதவீத தேர்ச்சி பெற ஆசிரியர்கள் அயராது பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆய்வின்போது பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் உள்ளிட்ட ஆசிரியர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை