உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  மத்திய அரசின் குரு சிஷ்யா பரம்பரா பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்

 மத்திய அரசின் குரு சிஷ்யா பரம்பரா பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மத்திய அரசின் குரு சிஷ்யா பரம்பரா இரண்டு மாத பயிற்சி முகாமில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. கள்ளக்குறிச்சி விருக்க்ஷா கைவினை தொழில் கூட்டமைப்பு கட்டடத்தில் மத்திய அரசின் ஜவுளி அமைச்சக நிதி உதவியுடன் சென்னை பூம்புகார் தமிழ்நாடு கைத்திற தொழில் வளர்ச்சி கழகம் சார்பில் குரு சிஷ்யா பரம்பரா இரண்டு மாத மர சிற்ப பயிற்சி நடந்தது. இப்பயிற்சியில் 12 ஆண்கள், 18 பெண்கள் என 30 பேர் பயிற்சி பெற்றனர். இவர்களின் பயிற்சிக்காலம் நிறைவடைந்த நிலையில் இவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. புதுச்சேரி கைவினை அபிவிருத்தி ஆணைய உதவி இயக்குனர் ரூப்சந்தர் தலைமை தாங்கி மர சிற்ப பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். சேலம் பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் நரேந்திர போஸ், கள்ளக்குறிச்சி பூம்புகார் உற்பத்தி நிலைய மேலாளர் வேலாயுதம் முன்னிலை வகித்தனர். மரசிற்ப பயிற்றுநர் சக்திவேல் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை