உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கல்லுாரி சார்பில், தேவபாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் துவக்க விழா நடந்தது.விழாவிற்கு, உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., அங்கையற்கண்ணி, ஆர்.கே.எஸ்., கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் மகுடமுடி, தாளாளர் குமார், பள்ளி தலைமை ஆசிரியர் தண்டபாணி முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் வரவேற்றார்.திருவள்ளுவர் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் சிறப்புரையற்றினார்.முகாமில், ஆர்.கே.எஸ்., கல்லுாரி மாணவர்கள் தேவபாண்டலத்தில் தங்கி, பொது இடம், கோவில்களை சுத்தம் செய்தல், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட சமூக பணியில் ஈடுபட உள்ளனர்.மேலும், பிளாஸ்டிக் ஒழிப்பு, போதைப்பொருள் பயன்பாடு தவிர்த்தல், குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடத்த உள்ளனர்.விழாவில், ஊராட்சி தலைவர் கோவிந்தம்மாள் அருள்ஜோதி, உதவி பேராசிரியர்கள் ராஜா, ேஹமலதா, பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.கல்லுாரி துணை முதல்வர் ஜான்விக்டர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை