உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  ஆஷா பணியாளரின் குழந்தை இறப்பு: செவிலியர் மீது போலீசில் புகார்

 ஆஷா பணியாளரின் குழந்தை இறப்பு: செவிலியர் மீது போலீசில் புகார்

கச்சிராயபாளையம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்கெண்டிக்கல் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மனைவி ரேவதி, 25; கரியாலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆஷா பணியாளர். இவருக்கு கடந்த 5 மாதம் முன்பு 3 வது பெண் குழந்தை பிறந்தது. கடந்த 11 நாட்களுக்கு முன்பு ரேவதி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பிரசவத்திற்கு சேர்க்கப்பட்ட தாழ்கெண்டிக்கல் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், தகவல் தெரிவிக்காமல் வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த பெண்ணை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வரும்படியும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கும்படியும், ஆஷா பணியாளர் ரேவதியை தொடர்பு கொண்டு, அப்பகுதி செவிலியர் விமலா கூறியதாக தெரிகிறது. இதனால் ரேவதி தனது 5 மாத குழுந்தையுடன், நேற்று முன்தினம் காலை 11:00 மணிக்கு, அப்பெண்ணை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் சென்றார். அப்போது ரேவதியின் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தை இறந்தது. இந்த தகவல் அறிந்த ஆஷா பணியாளர்கள் 60க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை கரியாலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு குவிந்தனர். ஆஷா பணியாளரை கட்டாயப்படுத்தி பணி செய்ய வைத்த செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கரியாலுார் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை