உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணம் பறிப்பு: 2 பேருக்கு வலை

 பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணம் பறிப்பு: 2 பேருக்கு வலை

உளுந்துார்பேட்டை: திருநாவலூர் அருகே பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணப்பறித்துச் சென்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர். திருவெண்ணைநல்லூர் அடுத்த ஆனைவாரி பகுதியைச் சேர்ந்தவர் கூத்தான் மகன் ஐயப்பன் 35; இவர் மடப்பட்டு பகுதியிலுள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். நேற்று காலை 11 மணி அளவில் பெட்ரோல் பங்கில் இருந்த போது, பைக்கில் வந்த இருவர் பாட்டிலில் டீசல் போட வேண்டும் என கூறினர். பாட்டிலை வாங்கி டீசல் போடும்போது திடீரென பைக்கில் வந்த நபர் கள், ஐயப்பன் கையில் வைத்திருந்த ரூபாய் 2, 850 பணத்தை பிடுங்கிக் கொண்டு தப்பியோடிவிட்டனர். இது குறித்து ஐயப்பன் கொடுத்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடி இரண்டு பேரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை