உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  சிறுமிக்கு சூடு வைத்து பாலியல் சீண்டல் : போலீஸ் விசாரணை

 சிறுமிக்கு சூடு வைத்து பாலியல் சீண்டல் : போலீஸ் விசாரணை

உளுந்துார்பேட்டை: திருநாவலுார் அருகே, 4 வயது சிறுமிக்கு சூடு வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அருகே 4 வயது சிறுமியின் முகம், உடல் மற்றும் மர்ம உறுப்பில் சிகரெட்டால் சூடு வைத்ததும், கடித்த காயங்களும் இருந்தன. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டி.எஸ்.பி., அசோகன் மற்றும் திருநாவலுார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயங்களுடன் இருந்த சிறுமியை மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டு பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் சிறுமியின் தாயிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில், கார் டிரைவரான கடலுார் மாவட்டத்தை சேர்ந்த 30 வயது நபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருநாவலுார் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை