உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு விரைவு பஸ் மோதி ஐ.ஜே.கே., நிர்வாகி பலி

அரசு விரைவு பஸ் மோதி ஐ.ஜே.கே., நிர்வாகி பலி

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே அரசு விரைவு பஸ் மோதி ஐ.ஜே.கே., மாவட்ட இணைத் தலைவர் இறந்தார்.உளுந்துார்பேட்டை அடுத்த பரிந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார், 58; ஐ.ஜே.கே., கட்சியின் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட இணைத் தலைவர். இவர், நேற்று பிற்பகல் 3:00 மணியளவில் கரும்பு வெட்டும் விவசாய தொழிலாளருக்கு சாப்பாடு வாங்கிக் கொண்டு எலவனாசூர்கோட்டையில் ஆசனுார் சாலையில் பைக்கில் சென்றார்.அப்போது வேலுாரில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசு விரைவு பஸ் மோதி சிவக்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.இது குறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ