உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இறந்த மூதாட்டி குறித்து போலீஸ் விசாரணை

இறந்த மூதாட்டி குறித்து போலீஸ் விசாரணை

கள்ளக்குறிச்சி : அரியபெருமானுார் பஸ்நிறுத்தம் அருகே மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட பெயர், விலாசம் தெரியாத மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த அரியபெருமானுார் பஸ்நிறுத்தம் அருகே 60 வயது மதிக்கதக்க பெயர், விலாசம் தெரியாத மூதாட்டி கடந்த நவம்பர் 30ம் தேதி மயங்கிய நிலையில் இருந்தார். மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி கடந்த 5ம் தேதி உயிரிழந்தார். இது குறித்து சோமண்டார்குடி வி.ஏ.ஓ., கோபிநாத் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து மூதாட்டி யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை