உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை சிறப்பு முகாம்

 மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை சிறப்பு முகாம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் 18 வயதிற்கு கீழ்பட்ட மாற்றுத்திறனாகளுக்கான வயது தளர்வு முகாம் நாளை (25ம் தேதி) நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அந்தோணிராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : கள்ளக்குறிச்சி வட்டார வளமையத்தில் செவ்வாய் மற்றும் பிரதி வியாழன் தோறும் பள்ளி குழந்தைகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய அடையாள அட்டை மற்றும் அடையாள அட்டை புதுப்பித்தல் முகாம்கள் நடத்தப்படுகிறது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்டம் துறையின் கீழ் 18 வயதிற்கு கீழ்பட்ட மாற்றுத்திறனாகளுக்கான வயது தளர்வு முகாம் நடக்கிறது. இம்முகாமுடன் இணைந்து புதிய அடையாள அட்டை மற்றும் அடையாள அட்டை புதுப்பித்தல் முகாமும் நடத்தப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை