உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / துாக்கிட்டு மாணவர் தற்கொலை

துாக்கிட்டு மாணவர் தற்கொலை

கள்ளக்குறிச்சி: மரவானத்தம் கிராமத்தில் பள்ளி மாணவர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சின்னசேலம் அடுத்த திருக்குன்றத்தைச் சேர்ந்தவர் கோபிநாத் மகன் பரமசிவம், 15; பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவரது பெற்றோர் இறந்து விட்டதால், மாமா மாதேஸ்வரனுடன் வசித்து வந்தார்.கடந்த 11ம் தேதி காலை 8:00 மணியளவில் வெளியே சென்ற பரமசிவம் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.இந்நிலையில், மரவானத்தம் கிராமத்தில் உள்ள கொட்டகையில் பரமசிவம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை