உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆசிரியர் கூட்டணி பேரவை கூட்டம்

ஆசிரியர் கூட்டணி பேரவை கூட்டம்

சங்கராபுரம் : சங்கராபுரத்தில் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார பேரவைக் கூட்டம் நடந்தது. வட்டார தலைவர் சம்சுதீன் தலைமை தாங்கினார். ஆசிரியர் அன்பழகன், செம்பன், கணேசன், முகமது கவுஸ், மகளிரணி செயலாளர் சாந்தி, ராணி முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் கபரியேல் வரவேற்றார். பொருளாளர் தேவராஜ் வரவு செலவு கணக்கு வாசித்தார்.கூட்டத்தில் மாநில தலைவர் லட்சுமிபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.கூட்டத்தில் புஷ்பராஜ், ராதாகிருஷ்ணன், சீனுவாசன், நடராஜன், சாதிக், ஆசிரியை புஷ்பா, அருட்செல்வி உள்பட திரளாக ஆசிரியர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் மறைந்த ஆசிரியர்கள் காமராஜ், செல்வராஜ் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ஆசிரியை ஆயிஷா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை