உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் விழா

துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் விழா

சங்கராபுரம் : சங்கராபுரம் பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சீருடை வழங்கும் விழா நடந்தது.செயல் அலுவலர் சம்பத்குமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைச் சேர்மன் ஆஷாபீ முன்னிலை வகித்தார். விழாவில், பேரூராட்சி சேர்மன் ரோஜாரமணி, துப்புரவு பணியாளர்களுக்கு சீருடைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தி.மு.க., நகர செயலாளர் துரை, கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.இளநிலை உதவியாளர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை