உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / போட்டோ, வீடியோ எடுக்க கிண்டியில் 3 நாள் பயிற்சி

போட்டோ, வீடியோ எடுக்க கிண்டியில் 3 நாள் பயிற்சி

சென்னை:தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் இணைந்து, இ.டி.ஐ.ஐ., அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை என்ற முகவரியில், புகைப்படம் மற்றும் 'வீடியோ எடிட்டிங்' பயிற்சியை நடத்த உள்ளன.வரும் 7, 8, 9ம் தேதிகளில், தினமும் காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை பயிற்சி நடைபெறும்.இதில் புகைப்படம், வீடியோ எடுத்தல், எடிட்டிங், கருவிகள், செயலி, மென்பொருள் செயல்முறை குறித்து பயிற்சி வழங்கப்படும்.இதற்கு, 18 வயதிற்கு மேற்பட்ட, 10ம் வகுப்பு முடித்த ஆண், பெண் பங்கு பெறலாம். முன்பதிவு அவசியம். அரசு சான்றிதழ் வழங்கப்படும்.குறைந்த வாடகையில், தங்கும் வசதி செய்து தரப்படும். பயிற்சி குறித்து, www.editn.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.மேலும் விபரங்களுக்கு 86681 02600, 70101 43022, 86681 00181 என்ற எண்களில், திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10:00 முதல் மாலை 5:45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை