உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மர்மமான முறையில் 9 மாடுகள் உயிரிழப்பு

மர்மமான முறையில் 9 மாடுகள் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதுார், : ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, மாம்பாக்கம் சிப்காட் சாலைகளில், நேற்று மாலை வாயில் நுரை தள்ளியபடி, சாலையில் ஆங்காங்கே 9 மாடுகள் உயிரிழந்து கிடந்தன.அப்பகுதியினர், ஸ்ரீபெரும்புதுார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார், சாலையில் இறந்து கிடந்த மாடுகளை ஜேசிபி வாகனங்கள் வாயிலாக அங்கிருந்து அப்புறப் படுத்தினர்.மேலும், மாடுகளுக்கு விஷம் வைத்து கொல்லப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்