உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தாழ்வாக தொங்கிய கேபிளால் விபத்து ஸ்கூட்டரை தரதரவென இழுத்து சென்ற பஸ்

தாழ்வாக தொங்கிய கேபிளால் விபத்து ஸ்கூட்டரை தரதரவென இழுத்து சென்ற பஸ்

சென்னை, திருவொற்றியூரில் இருந்து பிராட்வே செல்லும், தடம் எண்: 56சி என்ற மாநகர பேருந்து, ராயபுரம், கல்மண்டபம் சந்திப்பு அருகே, நேற்று காலை சென்று கொண்டிருந்தது. அங்கு அந்தரத்தில் தாழ்வாக தொங்கியபடி கிடந்த கேபிள், அப்பேருந்தில் சிக்கியது. பேருந்தும் கேபிளை இழுத்தபடி சென்றது.அப்போது, பேருந்தின் பின்னால் வந்த ராயபுரத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அசோக்குமார், 32, என்பவரின் ஸ்கூட்டரில் கேபிள் சிக்கி, ஸ்கூட்டருடன் அவரை தரதரவென இழுத்துச் சென்றது.அசோக்குமாரின் கழுத்திலும் கேபிள் சிக்கியது. சாமர்த்தியமாக செயல்பட்ட அவர், ஸ்கூட்டரில் இருந்து குதித்தார். இதனால், லேசான காயங்களுடன் நுாலிழையில் உயிர் தப்பினார். அதேநேரம், கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்புறம் நிறுத்தப்பட்டிருந்த தடம் எண்: 1-01 மாநகர பேருந்தின் சக்கரத்தில் சிக்கி ஸ்கூட்டர் நொறுங்கியது.இது குறித்து ராயபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

விழிக்குமா மாநகராட்சி

சென்னையில், பெரும்பாலான இடங்களில் மின் கம்பங்கள், சாலையோர மரங்கள் உள்ளிட்டவற்றில் தனியார் கேபிள் நிறுவங்களின் கேபிள்கள் அந்தரத்தில் தொங்கியபடி உள்ளன. இதில் பயன்பாட்டில் இல்லாத கேபிள்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முறையாக அகற்றுவதில்லை. அதேபோல, விளம்பர தட்டிகளும் மின் கம்பங்களை அலங்கரிக்கின்றன. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம். நேற்றைய விபத்தில் வாலிபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். உயிர்பலி அசம்பாவிதங்கள் ஏற்படும்முன், மாநகராட்சி விழித்துக்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை