உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விஷ ஜந்துக்களின் கூடாரமான சுற்றுச்சுவர் இல்லாத பள்ளி

விஷ ஜந்துக்களின் கூடாரமான சுற்றுச்சுவர் இல்லாத பள்ளி

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், பென்னலுார் ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில், 110 மாணவ -- மாணவியர் பயின்று வருகின்றனர்.இப்பள்ளியின் ஒரு பகுதியில் மட்டும் சுற்றுச்சுவர் இல்லை. இதனால், அருகில் உள்ள புதர்களில் இருந்து, பாம்பு, பூச்சிஉள்ளிட்ட விஷ ஜந்துக்கள்பள்ளி வளாகத்தில் உலாவுகின்றன. இதன் காரணமாக,மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.எனவே, பாதுகாப்பற்ற சூழல் உள்ள நிலையில், மாணவர்களின் நலன் கருதி சுற்றுச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை