உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மின்மாற்றி ஆபத்து உணராமல் விளையாடும் சிறுவர்கள்

மின்மாற்றி ஆபத்து உணராமல் விளையாடும் சிறுவர்கள்

வாலாஜாபாத், வாலாஜாபாத் ராஜவீதி வழியாக, செங்கல்பட்டு செல்லும் சாலையில், தனியார் வீட்டுமனை பிரிவு உள்ளது. அதன் அருகே, ஒற்றை மின்கம்பத்தில், மின்மாற்றி பொருத்தப்பட்டு உள்ளது.இந்த மின்மாற்றியை சுற்றிலும், மின்வாரிய அதிகாரிகள் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை. இதனால், மின்மாற்றி அருகே, சிறுவர் - சிறுமியர் ஆபத்தை உணராமல், மின்கம்பத்தின் மீது ஏறி விளையாடி வருகின்றனர்.உயிர்பலி ஏற்படுவதற்கு முன், மின்மாற்றி அமைக்கப்பட்ட மின்கம்பம் அருகே, பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை