உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / போந்துாரில் கழிவுநீரில் குடிநீர் குழாய்

போந்துாரில் கழிவுநீரில் குடிநீர் குழாய்

ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, போந்துார் ஊராட்சியில், கழிவுநீர் கால்வாயில் உள்ள குடிநீர் குழாயை மாற்றி அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட, போந்துார் ஊராட்சியில் ஒன்பது வார்டுகளில் 2,000த்திற்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளுக்கு குழாய் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.இந்த நிலையில், குடிநீர் குழாயானது, மழைநீர் கால்வாயில் தேங்கியுள்ள கழிவுநீரில் உள்ளது. இதனால், குடிநீர் செல்லும் பைப்பில் விரிசலோ அல்லது உடைப்பு ஏற்பட்டால், குடிநீரில் கழிவுநீர் கலக்கும் வாய்ப்பு உள்ளது. கழிவுநீர் கலந்த குடிநீரை பருகும் மக்களுக்கு, வயிற்று போக்கு, காலரா போன்ற நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாக அதிகாரிகள், கழிவுநீரில் உள்ள குழாயை மாற்றி அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை