உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பாவாஜி மடத்தில் கும்பாபிஷேகம்

பாவாஜி மடத்தில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அன்னை இந்திரா காந்தி சாலையில், உதாசின் பாவாஜி மடம் உள்ளது. பழமையான இம்மடத்தில் காளிகாம்பாள் உற்சவர் விக்ரஹத்திற்கு மஹா கும்பாபிஷேகம், நேற்று காலை 6:00 மணிக்கு நடந்தது. தொடர்ந்து, புது விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, யந்தஸ்தாபிதம், நவகலச பூஜை, ஹோமம் உள்ளிட்டவை நடந்தது. இந்த விழாவில், பாவாஜி மடத்தின் மடாதிபதி சுவாமி கர்ஷினிஜி மகராஜ், நிர்வாகி சுதான்சு முனி மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்