| ADDED : மே 10, 2024 09:23 PM
காஞ்சிபுரம்:தமிழக அரசு கடந்த 2021 முதல், பெண்களுக்கான 'கட்டணமில்லா பேருந்து, மகளிர் உரிமைத்தொகை, மக்களை தேடி மருத்துவம்' உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை புதிதாக துவங்கி செயல்படுத்தி வருகிறது.இதில், மக்களைத் தேடி மருத்துவ திட்டம் வாயிலாக நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் நோயாளிகளிடம், வீடுகளுக்கே சென்று மருந்து, மாத்திரைகளை வழங்குவதும், பிசியோதெரபி சிகிச்சை அளிப்பது போன்ற பல்வேறு சேவைகள் இத்திட்டத்தில் வழங்கப்படுகின்றன.இத்திட்டம் துவங்கியது முதல், 1.70 கோடி பேர் பயனடைந்துள்ளனர். அருகில் உள்ள சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் மூலம், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற இணை நோயாளிகளுக்கு தேவையான மாத்திரைகள் செவிலியர்கள் வாயிலாக நேரடியாக வீடுகளுக்கே சென்று வழங்கப் படுகின்றன.இந்நிலையில், காஞ்சி புரம் மாவட்டத்தில் மட்டும், 2,03,112 பேர் இதுவரை பயனடைந்துள்ளனர் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.