உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க மின் நுகர்வோர் கூட்டத்தில் மனு

புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க மின் நுகர்வோர் கூட்டத்தில் மனு

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் ரயில்வே சாலை உதவி கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில்,நேற்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடந்தது.காஞ்சிபுரம் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். இதில், காஞ்சிபுரம் அண்ணா அவென்யூ பகுதியில், குறைந்தழுத்த மின்சாரத்தை சரி செய்ய வேண்டும். பள்ளூர் விநாயகபுரத்தில், விவசாய மின் இணைப்பு இடம் மாற்றி தர வேண்டும்.சங்கர மடம் பகுதியில், மின் பளு குறைக்க வேண்டும். ஏனாத்துார் கிராமத்தில், மின் கம்பங்கள் மீது விழும் மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் உள்ளிட்ட ஐந்து விதமாக கோரிக்கை மனுக்கள் வந்தன. இந்த மனுக்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என, பாண்டியராஜன் உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை