உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புழல் சிறை பெண் கைதி திடீர் மரணம்

புழல் சிறை பெண் கைதி திடீர் மரணம்

புழல் : மாதவரம் வி.எஸ்.மணி நகரைச் சேர்ந்தவர் வேதாமேரி, 69. வரதட்சணை கொடுமை சட்டத்தில் 2008ல் மாதவரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணை முடிந்து, இரண்டு ஆண்டு சிறை தண்டனையில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சிறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில், தீராத வயிற்று வலியும், சர்க்கரை நோயும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதனால் கடந்த 1ம் தேதி, சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று உயிரிழந்தார். இது குறித்து புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை