உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தம்பியின் மாமியாருடன் உறவு பொன்னேரி டிரைவர் படுகொலை

தம்பியின் மாமியாருடன் உறவு பொன்னேரி டிரைவர் படுகொலை

பொன்னேரி:பொன்னேரி அடுத்த கே.என்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார், 33; டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி, மகள் உள்ளனர். நேற்று மதியம் 1:30 மணிக்கு சிவகுமார், வீட்டில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம கும்பல், சிவகுமாரை ஓட ஓட வெட்டி தப்பியது. இதில், முகம் சிதைந்த நிலையில் சிவகுமார் உயிரிழந்தார். இந்த நிலையில், சிவகுமாரின் உடன்பிறந்த தம்பி தேவேந்திரன், 30, 'அண்ணனை நான் தான் வெட்டி கொலை செய்தேன்' எனக்கூறி, பொன்னேரி காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.விசாரணையில் தெரியவந்ததாவது:தேவேந்திரனின் மாமியாருடன், சிவகுமாருக்கு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதை, தேவேந்திரன் கண்டித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இந்த பிரச்னையால் தேவேந்திரன், நேற்று ஆத்திரத்தில் அண்ணனை தீர்த்துக்கட்டி உள்ளார்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.சிவகுமாரின் வீட்டில் இருந்து, மூன்று பட்டா கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை