உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சங்கரா பல்கலையில் கருத்தரங்கம்

சங்கரா பல்கலையில் கருத்தரங்கம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலைக்கழகம், புதுச்சேரிஇந்திரா காந்தி தேசிய கலை மையம் சார்பில், 'பிரிவினைகொடுமைகள் நினைவு நாள்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடந்தது.இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் வரலாற்றுநிகழ்வுகளை நினை வூட்டும் வகையில் நடந்த இக்கருத்தரங்கிற்கு, பல்கலைகழக துணைவேந்தர் ஸ்ரீநிவாசு தலைமை வகித்தார்.நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் பிராந்திய இயக்குனர் கோபால் பங்கேற்று உரையாற்றினார்.பிரிவினையால் ஏற்பட்ட கொடுமையை விளக்கும் வகையில் நிழற்படங்கள் மற்றும் ஆவணக் காட்சிகள் வாயிலாக புதுச்சேரி, இந்திரா காந்தி தேசிய கலை மைய துணை இயக்குனர் ராகவன் விளக்கம் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை