உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பாசன கால்வாயில் கழிவுநீர் கலப்பு

பாசன கால்வாயில் கழிவுநீர் கலப்பு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த, ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில், பெரிய ஏரி உள்ளது.இந்த ஏரிப்பாசன கால்வாய், ஈஞ்சம்பாக்கம் கிராம குடியிருப்புகளுக்கு நடுவே செல்கிறது. இந்த கால்வாய் ஓட்டிய குடியிருப்புகளில் இருந்து, வெளியேறும் கழிவுநீரை நேரடியாக கால்வாயில் விடுகின்றனர்.இதனால், 100 நாள் பணியாளர்கள் கூட கால்வாய் துார்வார முடியவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.எனவே, நீர்வளத் துறையினர் முறையாக ஆய்வு செய்து, ஈஞ்சம்பாக்கம் பாசன கால்வாய் கலக்கும் கழிவுநீரை தடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, நீர்வளத் துறையினர் கூறுகையில், பாசன கால்வாய் ஆக்கிரமிப்பு மற்றும் துார் வாரும் பணியை, ஆயக்காட்டுதாரர்கள் என அழைக்கப்படும் விவசாயிகள் தான் தற்காத்துக் கொள்ள வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை