உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் மூட்டை பூச்சி, கொசு கடியால் அவதி

ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் மூட்டை பூச்சி, கொசு கடியால் அவதி

சென்னை:சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், உள்நோயாளிகள் தங்கியிருக்கும் பகுதியில், மூட்டைப் பூச்சி, கொசு அதிகம் இருப்பதால், நோயாளிகள் கடும் அவதிப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து நோயாளிகளின் உறவினர்கள் கூறியதாவது:இங்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருவோர் பிரிவில், மூட்டை பூச்சி, கொசு மற்றும் கரப்பான் பூச்சி தொல்லை அதிகம் உள்ளதால், நோயாளிகள் துாக்கம் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.குறிப்பாக, ஆறாவது தளத்தில் உள்நோயாளிகள் பிரிவில் மூட்டை பூச்சிகள், கொசு மற்றும் கரப்பான் பூச்சி தொல்லை அதிகளவில் உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை