உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சங்கரா பல்கலை.,யில் ஆசிரியர்களுக்கான பயிற்சி

சங்கரா பல்கலை.,யில் ஆசிரியர்களுக்கான பயிற்சி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா நிகர்நிலை பல்கலை கழக வளாகத்தில், சங்கரா பள்ளி கல்வி குழுமத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி பட்டறை, பல்கலை துணைவேந்தர் சீனிவாசு தலைமையில் நேற்று நடந்தது.இதில், கல்வியியல் துறை முதல்வர் கே.வெங்கட்ரமணன் வரவேற்றார். தமிழ்நாடு கல்வியியல் பல்கலை முன்னாள் துணைவேந்தர் பஞ்சநாதன், பள்ளிக்கல்வி குழும் செயலர் சந்திரமவுலி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்புரையாற்றினர்.இதில், தமிழகம் முழுதும் உள்ள சங்கரா பள்ளி குழுமத்தில் பணிபுரியும் 75க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பயிற்சி பட்டறையில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி ஏற்பாட்டை அறிவியல் மற்றும் கல்வித் துறையினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை