உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஒரு நாள் மழைக்கே சகதியான காஞ்சி சாலை

ஒரு நாள் மழைக்கே சகதியான காஞ்சி சாலை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, சேக்குபேட்டை குறுக்கு சாலியர் தெருவில், 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட தார் சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.மேலும் முறையான வடிகால்வாய் வசதி இல்லாததால், நேற்று முன்தினம் பெய்த சாதாரண மழைக்கே, சாலையில் உள்ள பள்ளத்தில் மழை நீர் தேங்கி, சகதி நீராக மாறியுள்ளது.இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, சேதமடைந்த சாலையை ‛பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைப்பதோடு, மழைநீர் தேங்காமல் முறைக்க வடிகால் வசதி ஏற்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sampath
மே 16, 2024 19:37

Actually this is the fault of weathermen They did not inform in writing to the government No information by Rain god also Otherwise DMK government would have averted this easily Any how State government has requested crores for repairing this road We will see


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை