உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கஞ்சா கடத்திய இருவர் கைது

கஞ்சா கடத்திய இருவர் கைது

குன்றத்துார்:குன்றத்துார் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலை, குன்றத்துார் அருகே சிறுகளத்துாரில், தாம்பரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று, வாகன சோதனையில் ஈடுபட்டனர்.கர்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து சென்னைக்கு, குன்றத்துார் வழியே வந்த 'ஸ்விப்ட் டிசைர்' காரை நிறுத்தி சோதனையிட்டனர்.காரில் இருந்த 5 கிலோ கஞ்சா, 200 கிராம் பிரவுன் சுகர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.காரில் பயணித்த, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல், 34, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சபீனா காத்துன், 30, என்ற பெண் ஆகிய இருவரையும், போலீசார் கைது செய்து, இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை