உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உலகளந்தார் மாட வீதியில் நெரிசல் ஒருவழி பாதையாக மாற்ற வலியுறுத்தல்

உலகளந்தார் மாட வீதியில் நெரிசல் ஒருவழி பாதையாக மாற்ற வலியுறுத்தல்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன் கோவிலை சுற்றிலும், உலகளந்த பெருமாள் கோவில், ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் உள்ளிட்ட கோவில்கள் உள்ளன.விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் இக்கோவில்களுக்கு வருவோர் தங்களது வாகனங்களை, காமாட்சியம்மன், உலகளந்தார் மாட வீதியில் சாலையின் இருபுறமும் 'பார்க்கிங்' செய்கின்றனர்.மேலும், இப்பகுதியில் உள்ள லாட்ஜ்களில் 'பார்க்கிங்' வசதி இல்லாததால், லாட்ஜிற்கு வருவோர், தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டு செல்கின்றனர்.விடுமுறை தினமான நேற்று, இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் வந்த வழியே திரும்பி செல்வதற்குகூட வழியில்லாமல் நெரிசலில் சிக்கி தவித்தனர்.எனவே, உலகளந்த பெருமாள், காமாட்சியம்மன் கோவில் பகுதியில் வாகனங்களை நிறுத்த தடைவிதிப்பதோடு, விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில், இப்பகுதியில் ஒருவழிப் பாதையாக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, காஞ்சிபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது:காஞ்சிபுரம் எஸ்.எஸ்.கே.வி., பள்ளியில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நடந்ததால், அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், ஒரே வழியில் வாகனங்கள் சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.வெளியூரில் இருந்து வரும் டெம்போ டிராவலர் போன்ற பெரிய வாகனங்களை நகருக்குள் அனுமதிக்காமல் ஒலிமுஹமதுபேட்டையில் உள்ள யாத்ரி நிவாஸில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காமாட்சியம்மன், உலகளந்த பெருமாள், பஞ்சொட்டி தெருவில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை