உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சி, ஓங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் மனைவி புவனேஸ்வரி, 25; தம்பதியினருக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர்.இந்நிலையில், நேற்று முன்தினம், இவர்களது குடிசை வீட்டிற்கு கூரை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது, தன் வீட்டிற்குள் மின் இணைப்பை துண்டிக்க மின் ஒயரை பிளக்கில் இருந்து புவனேஸ்வரி எடுத்துள்ளார்.அப்போது, மின்சாரம்பாய்ந்து அவர் துாக்கி வீசப்பட்டார். இதில், புவனேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த உத்திரமேரூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை