உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  சாலையில் சுற்றி திரிந்த 4 மாடுகள் பிடிபட்டன

 சாலையில் சுற்றி திரிந்த 4 மாடுகள் பிடிபட்டன

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த நான்கு மாடுகளை, நகராட்சி அதிகாரிகள் பிடித்து மாட்டுத் தொழுவத்தில் ஒப்படைத்தனர். ஸ்ரீபெரும்புதுார் நகராட்சிக்குட்பட்ட திருவள்ளூர் சாலை உட்பட பல்வேறு பகுதிகளில், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், பகல் மற்றும் இரவு நேரங்களில் மாடுகள் சுற்றித்திரிவதுடன் சாலையில் படுத்து ஓய்வெடுக்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே, அவற்றை பிடித்து, மாட்டுத் தொழுவத்தில் அடைக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து, ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் தலைமையில், திருவள்ளூர் சாலையில், சுற்றித்திரிந்த நான்கு மாடுகள் நேற்று பிடிக்கப்பட்டு, காஞ்சிபுரத்தில் உள்ள மாட்டுத் தொழுவத்தில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி