உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சங்கரா கலை கல்லுாரியில் கணினி அறிவியல் கருத்தரங்கம்

சங்கரா கலை கல்லுாரியில் கணினி அறிவியல் கருத்தரங்கம்

ஏனாத்துார்:காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், கணினி அறிவியல் தொடர்பான பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான கருத்தரங்கம், கல்லுாரி முதல்வர் கலைராம வெங்கடேசன் தலைமையில் நடந்தது.கணினி அறிவியல் துறைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். பஜாஜ் நிதி நிறுவன சீனியர் மேலாளர் கார்த்திகேயன், கணினி அறிவியல் தொடர்பான கையேடு வெளியிட்டார்.சென்னை போரூர் இண்டெல்சாட் தகவல் தொழில்நுட்ப பூங்கா கணினி மென்பொறியாளர் ரமேஷ், தகவல் தொழில்நுட்பத்தில் புதிதாக வந்துள்ள தொழில்நுட்பங்கள் குறித்து பேசினார். இதில், பொது அறிவு, தகவல் தொழில்நுட்பம் தொடர்பான போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை