காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே விநாயகர் ஊர்வலத்தின்போது, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, ஏழு பேரைப் போலீசார் கைது செய்தனர்.மாகரல் அடுத்த கணபதிபுரத்தை சேர்ந்தவர் தனசேகர்,50. இவரும் மற்றும் சிலரும், விநாயகர் சதுர்த்தி அன்று இரவு 11 மணிக்கு, விநாயகர் சிலையை வீதியுலா கொண்டு சென்றனர். அப்போது மற்றொரு தெருவிலிருந்து சுரேஷ்,32 மற்றும் சிலர், மற்றொரு விநாயகர் சிலையை வீதியுலா கொண்டு சென்றனர். இரு தரப்பினரும் எதிர் எதிரே சந்தித்தபோது, வழிவடுவது தொடர்பாக, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.இதில் காயமடைந்த தனசேகர், சுரேஷ் ஆகியோர் சிகிச்சைக்காக, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இரு தரப்பினரும் கொடுத்த புகாரின்பேரில், மாகரல் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சுரேஷ்,32, கார்த்திக்,24, சதீஷ்,25, சிவகாமி,49, தனசேகர்,50, மாறன்,27, தேவராஜ்,46 ஆகியோரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.