UPDATED : ஆக 07, 2024 08:09 AM | ADDED : ஆக 07, 2024 02:43 AM
காஞ்சிபுரம், கிருஷ்ண ஜெயந்தி விழா வரும் 26ல் கொண்டாடப்பட உள்ளது. சின்ன காஞ்சிபுரத்தில், அஸ்தகிரி தெருவில், 15க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், கிருஷ்ணர் பொம்மை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, முதுநிலை கைவினை கலைஞருமான என்.சுரேஷ் கூறியதாவது:கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, ஒன்றரை மாதமாக, 4 இன்ச் முதல், 4 அடி வரையிலான பல்வேறு விதமான கிருஷ்ணர் பொம்மைகளை தயார் செய்து வருகிறோம். இந்தாண்டு 20 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.இந்தாண்டு 10க்கும் மேற்பட்ட புதுவகையான கிருஷ்ணர் பொம்மை தயார் செய்துள்ளோம். எங்களிடம் குறைந்தபட்சம் 80 - 15,000 ரூபாய் வரை பல்வேறு வடிவங்களில் கிருஷ்ணர் பொம்மைகள் விற்பனைக்கு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.