உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மின் கம்பத்தில் பைக் மோதி வடமாநில தொழிலாளி பலி

மின் கம்பத்தில் பைக் மோதி வடமாநில தொழிலாளி பலி

ஸ்ரீபெரும்புதுார்:அசாம் மாநிலம், தின்சுகியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜேக்கப் சோனா, 31. ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, வல்லம் பகுதியில் தங்கி, ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளராக வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் மாலை, பப்பு, 29, என்பவருடன், ஆத்துாரில் உள்ள ஒப்பந்த மேற்பார்வையாளரிடம் ஊதியம் வாங்கிக் கொண்டு, இருவரும் மது அருந்திவிட்டு, ஸ்ரீபெரும்புதுார் அடுத்த மலைப்பட்டு கிராமத்தில் உள்ள நண்பரை சந்திக்க, 'ஹோண்டா யுனிகான்' பைக்கில் சென்றார்.பிள்ளைப்பாக்கம் அருகே வந்தபோது, மதுபோதையில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில், ஜேக்கப் சோனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பப்பு தலையில் காயங்களுடன் உயிர் தப்பினார்.ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை