உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கோயம்பேடில் விலை வீழ்ச்சி குப்பையில் குவிந்தது சாமந்தி

கோயம்பேடில் விலை வீழ்ச்சி குப்பையில் குவிந்தது சாமந்தி

கோயம்பேடு, : சென்னையில் பெய்த மழை காரணமாக கோயம்பேடு சந்தையில் பூக்கள் விற்பனை மற்றும் விலை சரிந்து, பூக்கள் குப்பையில் கொட்டப்படுகின்றன.கோயம்பேடு சந்தைக்கு ஓசூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ஊட்டி, திண்டுக்கல், ஆந்திரா, பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து, அதிக அளவில் பூக்கள் வருகின்றன.சென்னையில் இரு நாட்களாக பெய்த மழை காரணமாக, பூக்கள் விற்பனை மந்தமான நிலையில் உள்ளது. இதனால், பூக்கள் விலை குறைந்துள்ளது.இதையடுத்து 1 கிலோ பன்னீர் ரோஸ் 30 -- 40 ரூபாய், சாக்லேட் ரோஸ்- 50 -- 60, சாமந்தி- 10-40, முல்லை 600, மல்லி - - 1,200 ரூபாய், கனகாம்பரம் 200 முதல்- 300 ரூபாய்க்கு விற்பனையானது.கோயம்பேடு பூ சந்தைக்கு ஆந்திராவில் இருந்து, 40 வண்டிகள் சாமந்தி பூக்கள் வந்த நிலையில், மழையால் பூக்கள் சேதமடைந்து, விற்பனை குறைந்தது. இதனால், 4 டன் சாமந்திப் பூக்கள் வீணாகி குப்பையில் கொட்டப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி