உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சிறுமின்விசை குழாய் சீரமைக்க செவிலிமேடு வாசிகள் கோரிக்கை

சிறுமின்விசை குழாய் சீரமைக்க செவிலிமேடு வாசிகள் கோரிக்கை

செவிலிமேடு, காஞ்சிபுரம் மாநகராட்சி செவிலிமேடு, மேட்டு காலனி பகுதிவாசிகளின் கூடுதல் குடிநீர் தேவைக்காக, 2015 - 16ல் கோடை கால குடிநீர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், எம்பெருமான் கோவில் தெருவில், 4.50 லட்சம் ரூபாய் செலவில் சிறுமின்விசை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.அப்பகுதிவாசிகள் வீட்டு உபயோகத்திற்காக, இந்த குடிநீர் தொட்டியில் தண்ணீர் பிடித்து வந்தனர். இந்நிலையில், இரு மாதங்களுக்கு முன் ஆழ்துளை குழாயில் அமைக்கப்பட்டுள்ள நீர்மூழ்கி மின்மோட்டார் பழுதடைந்தது. இதனால், குடிநீர் தொட்டி பயன்பாடின்றி வீணாகி வருகிறது.தற்போது, கோடை காலம் துவங்கியுள்ளதால், குடிநீரின் தேவையும் அதிகரித்துள்ளது. இதையடுத்து, அருகே உள்ள பகுதிக்கு சென்று தண்ணீர் பிடித்து வரவேண்டி உள்ளது.எனவே, பழுதடைந்த சிறுமின்விசை குடிநீர் தொட்டியை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை